Sunday, August 16, 2009

  • நிலா ,நட்சத்திரம்,மனசு,....

நீ நமக்குள்

எல்லாம் முடிந்து போனதாக

புள்ளிகள் வைக்கும் போதெல்லாம்

விரிந்து கொண்டே இருக்கிறது என் வானம்,.....

  • தொடரும்

நீ , நமக்குள்

ஏதும் இல்லை என்றபோது,

எனக்குள் தொடர

ஆரம்பித்தன உன் நினைவுகள்,....

Tuesday, August 11, 2009

ஈழம் இனி தமிழோடு.....

இனி என் எழுத்துக்கள்

ஈழத்து தமிழனின் விடுதலைக்கு

தேசியகீதமாகட்டும் ....

என் தமிழனை எல்லாம் இழந்த

பிறகு எழுத வந்திருக்கிறேன் …. என்ன செய்வது ?ஒரு ஆற்றான்மை!எங்கெங்கோ ஈழத்தைப் பற்றிய குரல்கள் ,

அவை யாவும் கரை தாண்டும் முன்னரே ,

கடலின் அலையில் ஓய்ந்து போகும் ஊமைக்குரல்கள் ….

யாருக்குத் தெரியும்

உலகின் ஆக்கமும் ஆதாரமும் தமிழ் என்று ,

அறியாமல் தானே அவனை அழிக்கிறீர்கள் ,

எங்கு தமிழ் வீழ்ந்து போகிறதோ

அங்கு உலகம் விழத் தயாராக இருக்கவேண்டும் ….

இங்கே ,விழுந்தவை எல்லாம் விதைகளே! ,

அவை பூக்களாவதும், போர்களாவதும்,

என் சிங்களத் தம்பி உன் கைகளில்தான் …

என் சிங்களச் சகோதரா ,

மறப்பதற்கும் , மன்னிப்பதற்கும்

தமிழன் எப்போதுமே தயார் ,

நாங்கள் இழந்தவை கொடுப்பதற்கும் ,

இனியவை தருவதற்கும் நீ தயாரா ?

ஏய் , சிங்களத் தலைவா ,

நீ எங்கடை நாட்டின்

இளங்கலைப் பயிர்களை மேய ,

உன் தேசத்து கருப்பு ஆடுகளை மேவினையோ.….

இரக்கமில்லாதவனே!

ஆதியில் அது என் வீடு ,

அலைகடலின் வினையால் பிரிந்து

ஆனது அது உன் நாடு .

மேலைக்கடல் முழுதும் என் தமிழினம் ,

நாளை , வீடு திரும்பினால் , உன் நாடு திரும்பிடும் .

"சிலர் " கதை முடிந்ததாகப் பெருங்கதை பேசாதே ,

இது காலம் உனக்குக்

கொக்கரித்துப் போட்ட கடைசி நிமிடம் ,

நீ காலம் கடத்தினால்

கணப் பொழுதுகளில்

பெருங்களம் காணத் தயாராய் இருக்க வேண்டியிருக்கும் …

இப்போதும் ,உன் நாடென்றால்

திருப்பித் தந்து விடுகிறோம்,

நாங்கள் இழந்த உயிர்களை

நீ திருப்பித் தருவதாக இருந்தால் மட்டும் …

நாளை நல்லதொரு வேளையில் ,

செங்காந்தள் பூத்திருக்க ,

மனம் தொடும் மாலைக் காற்றில்

சிங்களமும் , தமிழும் ,நட்பினில் களித்திருக்கட்டும்!

நீயும், நானும் நாமென.

ஈழம் இனி தமிழோடு………….. அன்புடன் நிலாப்ரியன்

என் அன்புமிக்கோரே, வணக்கம். என் எழுத்துக்கள் ஈழத்து இதயம் தொட்டு பேசும் ஆசையில் அல்ல , இதயம் விட்டுப் போனவர்களின் கரங்கள் பற்றிக்கொள்ள....---------------------------------------------------