Monday, March 28, 2011

விடியலில் அவள் ...










நீ தொட்டுப் போடும்

கோலம் பார்க்கவே

விடிகிறது என் வானம்!

இரவுகளில் நிலவாய் இருந்து

ஆளுமை செய்தவளே ,

காலையில் கம்பிவலைக்குள் என்னைக்

கட்டிப் போடுவது என்ன நியாயம் ?

உன் புன்னகைகளை , வாசல் கோலங்களில்

எனக்கான விடியலின் பரிசாய்த் தரும்

சூட்சமம் எங்கேயடி கற்றுக்கொண்டாய் ?

தழும்புகள்...


சுடும் இரவுகளுக்கு

மஞ்சள் புன்னகையில்

சுகம் தரும் இதமானவள் நிலா !

அவள் நிராகரித்த தருணங்களில்,

ஆகாயமாய் நான் எனக்குள்

ஏற்படுத்திக் கொண்ட தழும்புகள் எல்லாம் உண்மையை உரக்கச் சொல்லும்

வெள்ளி நட்சத்திரங்கள்.......

Sunday, March 27, 2011

கண்ணீர் சுனை...

விரும்பிய அழகியல்

நிறைத்துக் கிடந்த வானம் ,

தழுவலின் அர்த்தம் சொல்லி

சிலிர்க்கச் செய்யும் நிலா,

என் காதலின்பால் நான்

காத்துக் கிடந்த தருணம்.சுகமான சுகம்!

காதலின் நிகர் காதல் எனச் சொல்லி

நான் இமைமூடாது கழித்த இரவுகளை

இதயம் குத்திக் கிழித்தவள் ,ஏனோ

என் கண்ணீர்ச் சுனையில்

கால் நனைக்க ஆசைப்படுகிறாள்...

அன்று காதலின் சுகம் மட்டுமே அறிந்தவள்,

என் கண்ணீரின் சூடு அறிவாளா என்ன?






Saturday, January 29, 2011

ஓர் பட்டாம்பூச்சியின் தேடலும்,பூக்களின் காதலும்

கடலாய் விரிந்து!
காதல் பேசிக்கொண்டு ,
தினம் தினம் பூக்கள் தேடும்
பட்டாம் பூச்சிக்கு மட்டும் வாழ்க்கை!
தன்னைத் தரத் தயாராய் இருக்கும்
பூக்களுக்கு மத்தியில்
அவன் அந்தப்புரத்து மன்மதன்.
அறிவிக்கப்படாத மன்னவன்!
ஒரு பட்டாம் பூச்சி விட்டுப்போனதாய்
வீழ்ந்து கிடக்கும் பூக்களின் மத்தியில்
அதன் தேடல்கள் மட்டும் இனிதாய்...

கட்டிவைத்த காதல்...

என் காதல் அணுவின்
கடைநிலைக் கவிதை
உனக்குள் உயிர்ப் பூ
பூக்கச் செய்த தருணம்!
எனக்குள் தவம் நீட்டிக் கொள்ளச்
சொன்னது மனம்.
நான் காதலின் பரிசாய்
உனக்குத் தந்த முத்தங்களுக்கு
பதிலாய் நீ எனக்குத் தந்த
"பிள்ளை நிலா "என் சந்தோசத்தின்
முடிவில்லா முடிவிலி.
கடமைச் சூழலின் பிரிவு நிலையில்
நினைவுகளால் என்னையும்
நிழல்களாய் நம் பிள்ளையையும் கட்டிவைத்துக்
காதல் பேசும் உன் அன்புக்கு
நான் என்ன தவம் செய்தேன்!


Sunday, November 14, 2010

துளிகள்...


கடல் அலையின்
இரு நீர்த்துளிகள் கரையில்,
காதலர்கள்!


ஒரு கடல் தேசத்தின்
காதல் குருவிகளுக்கு
இறை தந்த
இரை , காதல் .

இரு துளிகள் ஒரு கடலாய்,
ஒரு கடலே மனம் கவர் காதலாய்.

வானில் நட்சத்திரதிரங்களுக்கு ஒரு நிலா
எங்கள் காதல் நட்சத்திரங்களுக்கு
எது நிலா?
வீதி நட்சத்திரங்கள் மின்னும்
காதல் தான் எங்கள் நிலா.

பூக்களைக் கொடுத்து காதல்
மொழிவதில் நானும் என்னவளும்
உடன்படுவதில்லை.
எங்கள் காதலுக்காய்
இன்னோர் உயிர்க்கொலை எதற்கு!

மௌன மொழி எங்களின் காதல்
சொல்லும் கடவுளின் தீர்க்கம் .



Thursday, October 28, 2010

சில நிமிடங்களை...


தென்றலில் மனம் தொலைத்தது போக ,

கனவுகளில் கவிதைகள் தொலைந்தது போக ,

வேளையில் நேரம் தொலைத்தது போக ,

விளையாட்டில் நேரம் தொலைத்தது போக

நான் சேமித்து வைத்த சில நிமிடங்களை இன்று

காதலில் தொலைக்கிறேன்....